நல்வாழ்வு அனுபவம்
நல்வாழ்வு அனுபவம்
எனக்கு 85 வயது ஆகிறது
உடல்,மனம் ஆரோக்கியமாக உள்ளத
டாக்டரிடமோ மருத்துவ மனைக்கோ செல்ல அவசியம் இல்லாமல் இருக்கிறது
என்னுடைய டாக்டர் நண்பர்கள் " உன்னைப்போல் எல்லோரும் இருந்தால்
நாங்கள் எப்படி வாழ்வது " என்று கவலைப்படுகிறார்கள்
என்னுடைய வாழ்வு முறைகள்
சூரிய உதயத்திற்கு முன்பு படுக்கையில் இருந்து எழுவது
ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது
பல்துலக்கி இரண்டு டம்ளர் நீர் அருந்துவது
சூரிய ஒளியில் நடை பயில்வது
மலஜலம் கழிப்பது
குளிப்பது
பூஜை அறையில் திருநீர்இட்டு கடவுள் பிரார்த்தனை செய்வது
காலை ஆகாரம் உட்கொள்வது
அன்றைய செய்தி தாள் படிப்பது
அன்று பணிகளை ஆராய்வது
போன் செய்திகளை படித்து அவசியமானால் பதில் அனுப்புவது
கம்ப்யூட்டரில் அமர்ந்து அன்றைய மெயில்களை படித்து பதில்அனுப்பு வது
அன்றய திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பது
பகல்உணவு உண்பது
படிக்க அவசியமான புத்தகங்கள் படிப்பது
மாலையில் கிரீன் டீ அருந்துவது
ஒரு மணி நேரம் கால்நடை பயில்வது
இரவு உணவு அருந்துவது
வீட்டில்உள்ள உறவினர்களிடம் உரையாடுவது
பத்து மணிக்கு படுக்கைக்கு செல்வது
உணவு முறைகள்
காலை பகல் இரவு உண்ணும் நேரங்கள் மாற்றக்கூடாது.மாறினால் இரைப்பை பாதிப்பு
ஏற்படும் .எப்பொதும் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம் வேண்டும்
நின்று கொண்டு உணவு அருந்த கூடாது.உட்கார்ந்து உண்ண வேண்டும்
வயிறு நிறைய உண்பதற்கு பதில் முக்கால் வயிறு நிரம்பினால்நல்லது
உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும்
உணவு உண்ணும்போது இடையில் நீர் அருந்த கூடாது
அவ்வப்போதுசமைத்த உணவு உண்பது நல்லது.பழைய உணவை தவிர்ப்பது நல்லது
உணவில் அனைத்து காய்கறிகள் பழங்கள் சேர்ந்து இருப்பது உடல்நலம்தரும்
அனைத்து வைட்டமின்களும் உலோக சத்துக்கள் உணவில் இருப்பது அவசியம்
எண்ணையில் பொரித்த உணவுகளையும் சர்க்கரை அதிமாக உள்ள உணவுகளையும்
அளவோடு உண்பது உடலநலம்காக்க அவசியம்
வெளி இடங்களில் உணவு உண்ணும் போது தூய்மையான உணவா என்பதை சோதித்து
உண்ணவேண்டும்.முடிந்த வரையில் வெளியில் சமைத்த உணவை தவிர்ப்பது நல்லது
கடைபிடிக்கும் நடைமுறைகள்
என்னுடைய பணிகளை நானே செய்து கொள்வது
குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி தேவை இருந்தால் செய்து கொடுப்பது
தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி இளஞ்சூட்டில் அருந்துவது
எந்த செயல்களையும் குறிப்பிட்ட நேரத்தில்செய்து முடிப்பது
உறவினர்கள் நண்பர்கள் வேண்டும் உதவிகளை தயங்காமல் செய்து உதவுவது
யாரிடமும் கோபத்தை காட்டாமல் இருப்பது
யாரிடத்திலும் வீண் வாக்கு வாதம் செய்வது
பணி ஆட்களை கனிவாக நடத்துவது
சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும்படி கண்காணிப்பது
விருந்தினர்கள் வந்தால் இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது
மறைந்த தாய் தந்தையரை தினமும் நினைவு கூர்ந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுதல்
பெரியோர்கள் அறிஞர்கள் அறிவுரைகளை கேட்டு நடப்பது
உறக்கம்
நல்ல உறக்கம் உடல்நலத்திற்கு மிகவும் அவசியம்
தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாக இருக்க. வேண்டும்
அதிக வெளிச்சம் இருப்பது நல்லதல்ல
அறை நிசப்தமாக இருப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும்
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுத்து குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும்
நினைத்த நேரத்தில் உறங்க நினைத்தால் உடல்நலம் பாதிக்கும்
விரும்பாத செயல்கள்
மாமிச உணவை உண்பது
மது அருந்துவது
புகை பிடிப்பது
போதை பொருள்களை பயன் படுத்துவது
பிறரைப்பற்றி அவதூறு பேசுவது
வீணாக கவலைப்படுவது
உணவையும் தண்ணீரையும் மின்சாரத்தையும் வீணாக்குவது
அவசியம் இல்லாத பொருள்களை வாங்குவது
சட்டத்துக்கு புறம்பான செயல்கள் செய்வது
கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு தவறுவது
சோம்பலாக காலம் கழிப்பது
மேலே குறிப்பிட்வை எல்லாம் நான் வியாபாரம் தொழில்களில்இருந்து விலகியபிறகு
தொழில்முனைவராக இருந்த பொழுது நடை முறைகள் வேறு விதமாக இருந்தது
மாதத்தில் மூன்று தினங்கள்கூட வீட்டில் இருந்தது கிடையாது
எப்போதும் பல ஊர்களுக்கு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்தது