Newspaper Article - Ellam Sugame

இனி எல்லாம் சுகமே

பசிக்கும்போது மட்டும்சாப்பிடுங்கள்.தாகமெடுத்தால் தண்ணீர்குடியுங்கள்

குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள் 

போதுமான அளவு உணவு சாப்பிடுங்கள்.நிதானமாக மென்று சாப்பிடுங்கள்

டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடாதீர்கள்தரையில் அமர்ந்து சாப்பிடுவது நல்லது

விரல்களில் அள்ளி சாப்பிடுவது நல்லது.எப்போதும் குறிப்பிட்ட நேரத்தில்சாப்பிடுவதால்

அஜீர்னம் எளிதாகும் 

தினமும் தவறாமல் விளையாடுவதுசிறுவர்.மற்றும் பெரியவர்களுக்கும் நன்மைதரும்

தினமும் 10 நிமிடங்கள் தனிமையில்அமைதியாக சிந்தியுங்கள் உங்கள் ஆற்றல்அதிகமாகும். தெய்வத்தை பிரார்த்தனைசெய்யுங்கள்

நல்ல புத்தகங்களை முடிந்த வரையில்படிப்பது மட்டும் அன்றி பிள்ளை களுக்கும்

அவற்றில் உள்ள நல்ல விஷயங்களைசொல்லிக்கொடுங்கள்

குழந்தைகளுக்கு எப்போதும் ஸ்மார்ட்போன்களை கொடுக்காதீர்கள்் சமூகவளைதளங்களில் நேரத்தை செலவிடுதல்தவிர்ப்பது நலம் தரும்

குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவதுஉடல் நலம் மேம்பட உதவும்

இரவு 10 மணிக்கு படுத்து காலை 6 மணிக்குஎழுந்து விடும் பழக்கம் மிக சிறந்தது

தினமும் 45 நிமிடம் நடை பயிற்சிசெய்வதால் உடலும் மனமும் நலம் பெறும்

உங்களை எப்போதும் மற்றவருடன்ஒப்பிடுவது நன்மை தராது.

மற்றவரைப்பார்த்து பொறாமை படுவதுவிரையமான செயல்

எப்போதும் நேர்மையான எண்ணங்கள்மட்டும் எண்ண வேண்டும்

கடுமையாக உழைப்பதை தவிர்த்துவிட்டு முடிந்த அளவு வேலை செய்வது உடல்நலம்மற்றும் மன நலம் காக்க பெரிதும் உதவும்

வருமானத்தில் ஒரு பகுதியை தேவை உள்ளவர்களுக்கு தானமாக கொடுத்து உதவுங்கள்

கடந்த காலத்தை மறந்து விட்டுநிகழ்காலத்தில் வாழ்வது மகிழ்ச்சி மற்றும் மன அமைதிதருவதாகும்

யாரையும் வெறுப்புவது உங்களைபாதிக்கும்

வாழ்க்கை பள்ளியில் நிறைய கற்கவேண்டும்

அவசியமான போது முடியாது என்பதைதெளிவாக கூறிவிடுங்கள்

வெளி ஊர்கள் மற்றும் வெளி நாடுகளில்உள்ள உறவினர்கள் நண்பர்களுடன்தொலை பேசி

மூலம் தொடர்பு கொள்வது மகிழ்ச்சி மற்றும்பரஸ்பர அன்பை  மேன்படுத்தும்

எவரையும் மன்னிக்க பழகுங்கள் . தேவையான போது தயங்காமல் மன்னிப்புகேட்பதால்

மன பாரம் நீங்கும் 

60 வயதுக்கு மேலும் 10 வயதுக்கு கீழும்உள்ளவர்களை கவனிக்க நேரம்ஒதுக்குங்கள்

உங்கள் அன்பு அவர்களுக்கு  மிகவும்அவசியம்

மற்றவர்கள் உங்களை பற்றி என்னநினைக்கிறார்கள் என்று கவலைபடக்கூடாது

யார் என்ன சொன்னாலும்  கேளுங்கள்ஆனால் மனதுக்கு எது சரி என்றுதோன்றுவதை

மட்டும்  செய்யுங்கள் 

Popular posts from this blog

நல்வாழ்வு அனுபவம்

Temples that I liked

Life Lessons