பழமொழிகளும் உண்ணும் உணவும்
பழமொழிகளும் உண்ணும் உணவும்
By Dr.Kanthimathi
0. சீரகம் இல்லா உணவும் சிறு பிள்ளை இல்லா வீடும் சிறக்காது
0. காட்டிலே புலியும் வீட்டிலே புளியும் ஆளைக்கொல்லும்
0. அவசர சோறு ஆபத்து
0. போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
0. கொளுத்தவனுக்கு கொள்ளு்இளைத்தவனுக்கு எள்ளு
0. தன் காயம் காக்க வெங்காயம் போதும்
0. பொங்குற காலத்தில் புளி மங்குற காலம் மாங்கா
0. நொறுங்கத்தின்றால் நோயில்லை
0. வாழை வாழ வைக்கும்
0. கண்ணுக்குத் தெளிவு பொன்னாங் கண்ணி
0. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்
0. சுட்ட எண்ணையைத் தொடாதே. வறுத்த பருப்பை விடாதே
0. வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல. சந்தை இல்லாத ஊரும் ஊரல்ல
0. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்ரமண்யனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை
0. உப்பில்லா பண்டம் குப்பையிலே