நல்வாழ்வுக்கு நல்ல குறிப்புகள்
தினசரி. குறிப்புகள்
அதிகாலையில் எழுவதுசிறந்தது
எழுந்தவுடன் சிறிது நேரம் தியானம் செய்வது நல்ல பயன் தரும்
பல்தேய்த்த பின் இரண்டு டம்லர் தண்ணீர் அருந்த வேண்டும்.நீருடன்எலுமிச்சை சாற சேர்த்து குடிப்பது நல்லது
பின்னர் மல ஜலம் கழித்தபின்னர் மெதுமெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்
காலை எட்டு மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் தவறாமல் சத்தான காலை உணவு உண்ண வேண்டும்
காலை நேர பணிகளை தொடங்கலாம்
காலை பதினொரு மணிக்கு பழ சாறு அருந்தலாம்
பகல் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் முழுமையான பகல்உணவு சாப்பிட வேண்டும்
சுமார் பதினைந்து நிமிடங்கள் ஓய்வுக்குப்பின் அன்றைய பணிகளைசெய்து முடிக்கலாம்
ஐந்து மணிக்கு கிரீன் டீ தேன் எலுமிச்சைசாறு சேர்த்து குடிக்கலாம் தேவைப்பட்டால் பாதாம் வால்நட் பிஸ்தா நிலக்கடலை போன்ற வற்றை சாப்பிடுவது நல்ல சத்து தரும்
பிறகு உடல்பயிற்சி செய்வதுடன் நண்பர்கள். உறவினர்களிடம் பழகலாம்
இரவு ஏழு மணிக்கு மேல் எட்டு மணிக்கள் இரவு உணவு அளவாக உண்ணலாம்
உணவுக்குப்பின் புத்தகங்கள் அல்லது பத்திரிகைகள் படிக்கலாம் அல்லது நல்ல சங்கீதம் கேட்டு மகிழலாம்
முடிந்தவரை தொலை காட்சி பார்ப்பதை அளவுடன் நிறுத்திக்கொள்வது நல்ல தூக்கத்துக்கு உதவும்
இரவு பத்து மணிக்கு மேல் பதினொரு மணிக்குள் உறங்க செல்ல வேண்டும்
எப்போதும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டும்
நன்றாக உறங்கி காலை ஆறு மணிக்குள் எழுவது நலம் . எப்போதும் ஒரே நேரத்துக்கு எழுவது நன்மை தரும்
உணவு குறிப்புகள்
எப்போதும் உணவை குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்
உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிட வேண்டும்
நின்று கொண்டு உணவு உண்ணுவது நீர் பருகுவது தவிர்க்க வேண்டும்
சாப்பிடும்போது வீண் பேச்சுகள் பேசுவதையும் தொலை காட்சி பார்ப்பதையும்
அலை பேசி பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும்
உணவில் காய்கறிகளையும் பழங்களையும் சேர்க்க வேண்டும்அசைவஉணவுகளை முடிந்த அசைவ உணவுகளை குறைந்த அளவு சாப்பிடலாம்
கொழுப்பு சர்க்கரை உப்பு ஆகியவற்றை குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது
மைதா மாவு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நன்மை தரும்
நொறுக்குவார்கள் தீனிகளையும் எண்ணையில் பொரித்த திண்பண்டங்களையும்
குறைவாக உண்பது உடல்நலத்தை காப்பாற்ற உதவும்
பழய உணவு உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல
வயிறு நிறையும்வரை சாப்பிடாமல் சற்று குறை வாக சாப்பிடுவது நல்லது
பல வித சத்துகள் கலந்த சமனாக்கப்பட்ட உணவு உடல்நலம் காக்கும்
உணவில் தேவையான வைட்டமின்கள் உண்ணும்உணவில் இல்லாவிட்டால் இல்லாத
வைட்டமின்களை தகுந்த மாத்திரைகளை மருத்துவர்ஆலோசனைபடி உட்கொள்ளலாம்
Eவைட்டமின் கிடைப்பதற்கு இளம் வெய்யில் உள்ள இடத்தில் சற்று நேரம் நிற்பது
நல்ல பயன்தரலாம்
பொதுவான சில குறிப்புகள்
எதற்காகவும் கோபம் வராமல் கட்டுப்படுத்துவது அளவற்ற நன்மை தரும்
எல்லோரிடமும் இனிமையாக பேசி பழக வேண்டும்
அனைவரிடமும் அன்பு காட்டுவது நமக்கு மேன்மை தரும்
தேவை படுவோர்க்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்வது பெறுமை தரும்
உதவி செய்த பின் உதவி பெற்றவரிடம் நன்றியை தவிர எதையும் அவரிடம் பெற விரும்பாதீர்
நமக்கு உதவுபவரிடம் நன்றி மறக்க கூடாது
எக்காரணத்திற்காகவும் மற்றவர்களுக்கு தீங்கு நினைப்பதோ செய்வதோ கூடாது
அறிவை விட உயர்ந்த செல்வம் இல்லை
அறிவாற்றலை அதிகரிக்க புத்தகங்கள் படிப்பது அறிஞர்களிடம் தொடர்பு கொள்வது
உலகில் முக்கிய இடங்களுக்கு பயணம் செல்வது நல்ல பயன் தரும்
காலம் பொன் போன்றது. விழித்து இருக்கும் ஒவ்வொரு நொடியையும் பயன்தரும் வகையில்
செலவிடுதல் மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும்
சிக்கனமாக செலவுகள் செய்வதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்
சோம்பல் பொறாமை மற்றவரைப்பற்றி கோள் சொல்வது தவிர்க்கவும் வேண்டும.
பொய்சொல்லும் பழக்கம் நன்மை தருவது அல்ல
எதற்காகவும் பயப்படாமல் தைரியமாக செயலாற்ற பழக வேண்டும்
முடிந்தவரையில் கடன் வாங்கி செலவு செய்யாமல் இருப்பது மன நிம்மதி தருவதாகும்
விடுமுறை நாட்களில் செய்ய வேண்டிய செயல்கள்
இருப்பிடத்தை தூய்மை படுத்துதல்
உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தல்
வீட்டு தேவைக்கான பொருள்களை வாங்குதல்
பொழுது போக்கு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது
முடிந்தால் பொது நல சேவைகள் செய்வது சிறப்பான செயலாகும்
நமது அறிவாற்றலை மற்றவர்களும் பயன்பெறச்செய்வது போற்ற தகுந்த பணி ஆகும்